சில்மிஷ நாயகன் நடித்து சமீபத்தில் வெளியே வந்த காளை படம் சந்தையில் சரிவர எடுபடவில்லை. இதனால், புதிய சர்ச்சைகளைக் கிளப்பப் பணியைத் துவங்கிவிட்டாராம் அந்த நாயகன். அது என்ன சர்ச்சை என்று கேட்க தோன்றுகிறதா? பொல்லாதவனுடன் சேர்ந்து நடிக்க எனக்கு விருப்பமாக இருக்கு என அவர் பத்திரிகைகளுக்குத் தெரிவித்தாகச் செய்திகள் வெளிவந்தன. இது போதாத சர்ச்சைக்கு அடித்தளமிட.
முதலுக்கே மோசம்...
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் குலேசர் படத்தை இயக்க உள்ள பி.வாசுக்குப் புதிய பிரச்னைத் துவங்கிவிட்டது. அந்தப் படத்தின் திரைக்கதையைத் தனது இஷ்டத்துக்கு மாற்றிவிட்டாராம் வாசு. இதனால், கடுப்பான ரஜினி, கதையை மாற்றினால் நான் நடிப்பது சந்தேகமே என தெரிவித்துள்ளார். முதலுக்கே மோசமாகிவிடும் என நினைக்கும் வாசு, சற்று அடக்கி வாசிக்கத் துவங்கிவிட்டாராம்.
படத்துக்கு டைட்டில் வைத்த தல...
அஜித் நடித்துவரும் படத்துக்கு டைட்டில் செலக்ஷன் நடந்ததாம். சுமார் 500 மேற்பட்ட பெயர்களைத் தேர்வு செய்து அவரிடம் நீட்டினாராம் இயக்குனர். அலசி ஆய்வு செய்து ஏகன் என படத்தின் டைட்டிலாக வைக்க அனுமதிக் கொடுத்தாராம். பட டைட்டிலுக்கு எல்லாம் அவரைப் பிடித்து அனுமதி வாங்க வேண்டியது இருக்கே என்று வெளியே யாருக்கும் கேட்காமல் மனதுக்குள்ளே புலம்புகின்றனராம்.
