Tuesday, February 19, 2008

கோலிவுட் கோமாளி

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் நடிக்கவுள்ள ரோபோ படத்தின் பட்ஜெட்டை பார்த்த கமலுக்குத் தலை சுற்றலே வந்துவிட்டதாம். நீங்களும் நினைப்பது போல அந்தப் படத்தின் பட்ஜெட் அதிகமில்லைங்க, சுமார் 150 கோடிதானாம். இதனால் தனது அடுத்த படமான `மர்மயோகி'யின் பட்ஜெட்டை 120 கோடியாக உயர்த்த உள்ளாராம் கமல். மேலும், டெக்னிக்கல் ரீதியிலும் படத்தை அசத்த வேண்டும் என்ற எண்ணத்தில் முழுவேகத்துடன் கமல் செயல்படத் துவங்கிவிட்டாராம்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா சமீபத்தில் வெளிநாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார். ஆங்கில படம் ஒன்றுக்கு இசையமைக்க அவர் புக் ஆகியுள்ளதே காரணம் என்கிறார்கள் விஷயமறிந்த வட்டாரங்கள்.


கோலிவுட்டை கலக்கி வரும் பாவனா, நயன்தாரா, அசின் ஆகியோர் சேர்ந்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளனர். இந்தக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் அடிக்கடி ஸ்டார் ஹோட்டல்களில் நடக்கிறது. இந்தக் கூட்டணி உருவாக காரணமே ஸ்ரேயாதானாம். அவரை எப்படியாவது கோலிவுட்டை விட்டு அனுப்ப வேண்டும் என்பதே இந்தக் கூட்டணித் தலைவிகளின் ஒரே இலக்கு. இப்படியும் ஒர் இலக்கு.


நடனப் புயல் பிரவுதேவாவின் பாணியிலேயே தானும் இயக்குனராக இப்போதே தயாரிப்பாளர்களிடம் கதை செல்ல லாரன்ஸ் துவங்கிவிட்டாராம். ஆனால், கதையைக் கேட்கத்தான் ஆள்கள் யாருமில்லையாம். இதனால் மிகுந்த வருத்தத்தில் உள்ள லாரன்ஸ் எப்படியாவது தனது திறமையைத் திரையுலகுக்கு காட்டியே ஆக வேண்டும் என பாடுபட்டு வருகிறாராம்.


பிரவு தேவாவைத் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கத் துவங்கியுள்ளார் ராஜுசுந்தரம். தனது முதல் படத்தின் ஹீரோவான அஜீத், ஹாங்காங்கில் கடும் சண்டை பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவருக்குத் தற்போதுள்ள ஒரே ரிலாக்ஸ்... அவரின் மனைவி ஷாலினி அனுப்பும் எம்.எம்.எஸ்.,க்கள் தானாம். அதில் வேறொன்றுமில்லை அவரின் மகள் செய்யும் குறும்புகளை அப்படியே படம் பிடித்து அனுப்பி வருகிறாராம் ஷாலினி.

`வில்' படத்தில் தனது பிளேபாய் கெட்டப்பை மாற்ற முயல்கிறாராம் எஸ்.ஜெ.சூரியா. அந்தப் படத்தில் ஊனமுற்றவரை போல அவர் நடிக்கவுள்ளதால், ஊனமுற்றோரை அவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வெளிநாட்டு படங்களை ஒன்றைக் கூட விடாமல் பார்த்துவருகிறாராம்.

ஷூட்டிங் ஸ்பார்ட்டில் கூட புத்தகம் கையுமாக வலம் வருகிறாராம் நவ்யா நாயர். சினிமாவுக்கு எதற்குப் படிப்பு என்றால், சினிமா எப்போது வேண்டுமானாலும் கைவிடும். ஆனால், படிப்பு என்றுமே துணை நிற்கும் என தத்துவங்களை அள்ளிவிடுகிறாராம்.

ரோபோ படத்தில் ஹீரோயின்களிடம் கடும் போட்டி நிலவினாலும், இரண்டு வருடங்கள் அக்ரிமென்ட் என்றதுமே சில நடிகைகள் யோசிக்கத் துவங்கிவிட்டார்களாம்.

தற்போது முன்னணியில் உள்ள நடிகைகளின் ஒரே பிரச்னை தொப்பை. இதை எப்படியாவது குறைக்க வேண்டும் என நடிகைகள் படாத பாடு படுகின்றனர். இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள புதிய அணுகு முறையைக் கையாளத் துவங்கிவிட்டார் நயன்தாரா. அப்படி என்னதான் செய்கிறார் என்று நீங்கள் கேட்கறீர்களா? அது ஒன்றுமில்லைங்க... கடலை மூலம் தொப்பையைக் குறைக்கலாம் என்ற புதிய முறையைத்தான் நயன் கண்டறிந்துயுள்ளார். ஷூட்டிங் இடைவெளி நேரத்தில் தூங்குவதற்குப் பதிலாக, ஏதாவது ஹீரோவை அழைத்து உட்காரவைத்து கடலை போடுகிறாராம். தங்களின் மீதுள்ள பாசத்தால்தான் நயன் அன்பாகப் பேசுகிறார் என பலர் தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.


தினசரி சினிமா செய்திகளைப் பெற என் பிளாக்கை மீண்டும் விசிட் செய்யுங்கள்.......


No comments: